'திமுக ஆட்சியில் கொலைகள் சர்வ சாதாரணமாகி விட்டது' - கோவை வழக்கறிஞர் கொலை குறித்து அண்ணாமலை கருத்து..!! - Seithipunal
Seithipunal



கோவையில் நேற்று (ஆகஸ்ட் 2) உதயகுமார் என்ற வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நேற்று (ஆகஸ்ட் 2) கோவையில் வழக்கறிஞர் உதயகுமார் வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இதற்காக வழக்கறிஞர் உதயகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொலைகள் சர்வ சாதாரணமாகி விட்டது. சட்டம் - ஒழுங்குத் துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஆனால் இதுவரை தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை சீரமைக்க முதலமைச்சர் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 

ஆனால் திமுக அமைச்சர்களே கொலைகளுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். இன்று தமிழகத்தில் தேசிய கட்சியின் மாநிலத் தலைவரே கொலை செய்யப் பட்டுள்ள நிலையில், சாமானிய பாமர மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவித அச்சத்திலேயே மக்கள் வாழ்கின்றனர். 

தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கை கவனிக்காமல், சமூக வலைத்தளங்களில் திமுக அரசை விமர்சிப்பவர்களை மட்டுமே தொடர்ந்து கைது செய்து வருகிறது. காவல்துறையும், தமிழக அரசும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைக் காக்க மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai Speaks About Covai Lawyer Murder


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->