முதலமைச்சரின் தொகுதியில் தவறு நடந்துள்ளது? வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு இரு வாக்குறுதிகளை கொடுத்த அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


சென்னை | முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு, இன்று மத்திய இனிதாய் அமைச்சர் எல் முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்தாவது, "நாட்டிலேயே மருத்துவ கட்டமைப்பு மிக நல்ல நிலைமையில் உள்ள மாநிலம் என்றல் அது தமிழகம் தான். 

அப்படிப்பட்ட நம் தமிழகத்தில், அதுவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது.

பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னுக்கு பின் தவறான தகவல்களை தெரிவிக்கிறார். நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது. இந்த உயிரிழப்புக்கு நிவாரணம் கொடுத்துவிட்டு ஆளும் திமுக அரசு தப்பிக்க முயல்கிறது. இதற்க்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

மாணவி பிரியாவின் பெற்றோரிடம் நாங்கள் இரு வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். மாணவி பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது. 

பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 மாணவிகளுக்கு தேவையான கால்பந்து பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்" என்று அண்ணாமலை தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Say about priya Death Chennai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->