அரசியலை விட்டு விலகத் தயார்.. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரை பிரபலகங்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கோவையில் ஜி ப மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக இருந்த புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "இந்த தேர்தலை நான் மிகவும் நேர்மையாக சந்திக்கிறேன். திமுக பணத்தை வைத்து கோவையை வென்றுவிடலாம். கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவினர் யாராவது ஒருவருக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த நிமிடம் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். 

இது ஒரு தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டத்தில் நான் நின்று கொண்டிருக்கின்றேன். பணத்தை வைத்து மக்களை வாங்கிடலாம் என்று திமுக நினைக்கிறது.

ஆனால் அதற்கு கோயம்புத்தூர், கரூர் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். பண அரசியல் என்பது இந்த தேர்தல் முதல் முடிந்து விட்டது. தேர்தலுக்கு முதல் நாள் மின்சாரம் துண்டித்து விட்டு பணம் கொடுத்தால் வாக்கு போட்டு விடுவார்கள் என்பது வேலைக்கு ஆகாது. யாராவது ஒருவர் பாஜக தனக்கு வாக்குக்காக பணம் கொடுத்தது என கூறட்டும் நான் அரசியலை விட்டு விலகுகிறேன்" என் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said he will quite from politics


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->