அண்ணனுக்கு "சின்னமும் இல்ல; ஓட்டும் இல்ல" ..! - சீமானுக்கு அண்ணாமலை பதிலடி.!! - Seithipunal
Seithipunal


கோவையில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் டெபாசிட் கூட பெற முடியாது என விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை. அண்ணாமலை மேல் சீமான் அண்ணன் உட்கார்ந்து விட்டார். இப்ப‌ என்ன‌அண்ணாமலை சீமான்‌அண்ணனின்‌ ஸ்லீப்பர் செல்லா? சீமான் அண்ணன் அண்ணாமலையின் ஸ்லீப்பர் செல்லா? 

பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள் எல்லாம் எந்தப்பக்கம் வருகிறார்கள் என சீமான் அண்ணனுக்கு தெரியும். இன்று களத்தில் பாஜக தனித்து நிற்கிறது. மக்கள் ஆதரவு மோடிக்கு தான். சீமான் இப்படி தான் பேசுவார். கண்டுகொள்ள வேண்டாம்" என விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response to Seeman criticism


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->