அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை.!! கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் துணை பொதுச் செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

அந்த பதிவில் "அண்மையில் பாஜக தலைவர் திரு அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்து வகையில் பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது தொடர்ந்து அவ்வாறு ஒருவர் பேசுவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என பதிவிட்டு இருந்தார்.

அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழியின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "ஆண்டாண்டு காலமாக தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசி பழகிய திமுகவினருக்கு எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாக தெரிவதில் வியப்பில்லை. 

உங்கள் தந்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனை பேச்சாளர்கள் வரை பேசும் தரக்குறைவான பேச்சை விட எந்த காலத்திலும் யாரும் யாரையும் தரக்குறைவாக பேசிவிட முடியாது.

அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு தரக்குறைவான பேச்சுப்பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை எந்தவித தகுதியும் மற்றவருக்கு வெற்றி விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பு அவர்களை பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்" என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response to DMK mp kanimozhi comments


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->