நாங்க காலில் விழுபவர்கள் அல்ல! யாருக்கும் அடிமை இல்லை! சி.வி சண்முகத்திற்கு அண்ணாமலை பதிலடி! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் அதிமுக தயவு இல்லாமல் பாஜகவால் வெற்றி பெற முடியாது என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "நல்ல போலீஸ்காரனை பார்த்தால் திருடனுக்கு பயம் வர தான் செய்யும். நல்ல போலீஸ்காரனை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி தான் இருக்கும் அதுதான் என்னுடைய பதில் என சி.வி சண்முகத்தின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர் எல்லா காவல்துறை நண்பர்களுமே திருடன் என பேசியதாக கேள்விப்பட்டேன். என்னுடைய தரத்தை குறைத்து எந்த ஒரு கருத்தையும் நான் முன்வைப்பதில்லை. அரசியல் களம் மாறி உள்ளது. இது இளைஞர்களுக்கான அரசியல். இப்போதும் அதே பழைய பஞ்சாகத்தை பேசிக்கொண்டு இருந்தால் யாரும் ஓட்டு போடப் போவதில்லை. இளைஞர்கள் சக்தி எப்படிப்பட்ட தலைவர்கள் வரவேண்டும் என தீர்மானிக்கிறது. 

இன்னொரு கட்சியை தாழ்த்தி பேசி தான் பாஜக வளர வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு முன்பு யாரெல்லாம் அமைச்சராக இருந்து வசூல் செய்து பழக்கப்பட்டுள்ளார்களோ அவர்களை எல்லாம் வசூலாக பார்க்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வசூல் செய்துதான் பழக்கம், அவர்களெல்லாம் மந்திரிகளாக இருந்ததே வசூல் செய்வதற்கு தான்.

அதனால் நாமும் நடை பயணம் போனால் வசூல் என நினைத்துக் கொள்கிறார்கள். நேர்மையாக அரசியல் செய்பவர்களுக்கு மட்டும் தான் நான் பேசும் அரசியல் புரியும். வசூல் செய்பவர்களுக்கெல்லாம் நேர்மைக்கு அர்த்தம் புரியாது. பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பார்த்து பொறாமையில் பேசுகிறார். நாங்கள் யாருடைய அடிமையும் கிடையாது. அதேபோன்று மற்றவர்கள் யாரும் எங்களுக்கு அடிமை கிடையாது. சனாதன தர்மம் எங்கள் உயிர் மூச்சு. 

நீங்கள் ஒருவரை கடவுளாக பார்க்கிறீர்கள் என்றால் நான் அவர்களை கடவுளாக பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்பாவின் பெயரை பயன்படுத்தி பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெறுபவன் எல்லாம் பெரிய ஆள் கிடையாது.

இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. நான் மரியாதை கொடுத்து பழகுபவன், அரசியல் நடத்துபவன். எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி சண்முகத்தை பற்றி நானும் சொல்லலாம். சிவி சண்முகம் 6 மணிக்கு மேலே ஒரு மாதிரி பேசுவாரு, 6 மணிக்கு முன்னாடி ஒரு மாதிரி பேசுவாரு. அதெல்லாம் சொல்ல நான் விரும்பவில்லை. அதனால நேர்மையைப் பற்றி செய்தி சண்முகம் எனக்கு பாடம் எடுக்க தேவையில்லை. 

அவர் அமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும் அதற்குள் நான் போக விரும்பவில்லை. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் விடமாட்டேன். இது சுயமரியாத இருக்கும் கட்சி. யாருடைய காலில் விழுந்தும் இந்த கட்சியில் இருக்கும் தொண்டர்களும் தலைவர்களும் இல்லை. கூட்டணி முக்கியம்தான், கூட்டணி இருந்தால் கொள்கை மாறுபாடு இருக்கத்தான் செய்யும் அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கூனி, குருகி கும்பிட்டு அதிகாரத்திற்கு வரவேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது. 2026ல் பாஜக தனித்தன்மையுடன் ஆட்சிக்கு வரும் சி.வி சண்முகத்தின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response to CVShanmugam criticism


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->