திரைக்கு முன்னால் புன்னகை.. திரைக்குப் பின்னால் அடிதடி.. திமுகவை பங்கம் செய்த அண்ணாமலை..!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழா தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததால் விழா முன்னதாக தொடங்கப்பட்டது. விழாவை முன்பே தொடங்கியது தொடர்பாக நவாஸ்கனிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நவாஸ் கனி அமைச்சர் ராஜகண்ணப்பனை "தொலைத்து விடுவேன்" என மிரட்டினார். இதனை தொடர்ந்து இருதரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமரசம் செய்ய முயற்சித்தார். இந்த நிலையில் சமாதானம் செய்ய முயன்ற மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை தகராறில் ஈடுபட்டோர் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டதால் அவர் கீழே விழுதார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை எடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "திரைக்கு முன்னால் புன்னகை திரைக்குப் பின்னால் அடிதடி. இது தான் திமுக கூட்டணியின் உண்மை நிலவரம். திமுக அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் மற்றும் IUML எம்பி திரு நவாஸ் கனி இடையே நடந்த சண்டையில் மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகம் என்ற ஒன்று திமுக ஆட்சியில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியோ?" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai criticized DMK and alliance parties


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->