வரும் 11ம் தேதி அமைச்சரவையில் மாற்றம்.. புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி.. முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கடந்த 19 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு ஒய்.எஸ்.ஆர்  ங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றார். 

அதன்பிறகு அவர் ஆந்திராவில் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார். இதனுடைய இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறிவித்திருந்தார். தற்போது மூன்று ஆண்டுகள் நெருங்குவதால் அமைச்சர்களை மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். 

இதனிடையே டெல்லி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்து மாநில வளர்ச்சி பணிகள், நிதி பற்றாக்குறை குறித்து விவாதித்தார். டெல்லியில் இருந்து திரும்பிய ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆளுநர் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், வரும் பதினோராம் தேதி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி, ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். அமராவதியில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது அனைத்து துறை அமைச்சரிடம் இருந்து இராஜினாமா கடிதத்தைப் பெற உள்ளார். 

இதனைத் தொடர்ந்து 8 ஆம் தேதி புதிய அமைச்சரவைப் பட்டியலை ஆளுநரிடம் வழங்க உள்ளார். அவரவர்களுக்கு வரும் 11ம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra ministers change for coming 11


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->