அமைச்சர் அன்பில் மகேஷ் மீது FIR போட வேண்டும்! விடாமல் விரட்டும் அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் கடந்த வாரம் வெளியிட்ட வீடியோ ஒன்றில், "சென்னையில் நடைபாதையை ஆக்கிரமித்து 55' உயர ராட்சஸ கொடி கம்பம் வைத்த திமுக கட்சியினர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? 

உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக எங்கள் நடைபாதையை ஆக்கிரமிக்கலாமா உதயநிதி ஸ்டாலின் அவர்களே? இதென்ன உங்க வீட்டு சொத்தா?

ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருக்கும் அன்பில் மகேஷ் அவர்களுக்கு, நடைபாதையில் இவ்வாறு கொடி கம்பம் வைப்பது தவறு என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாதா? 

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இதை திறந்து வைத்த அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

இந்த தொகுதி MLA எழிலன் அவர்கள் தொகுதி மக்களின் நடைபாதையை பாதுகாக்க போகிறாரா? அல்லது 
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு கொடி கம்பத்தை பாதுகாக்க போகிறாரா? 

சென்னை போலீஸ் தூக்கத்தில் இருந்து எப்பொழுது விழித்துக்கொள்ளும்?" என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி இருந்தது. 

இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி, "நீங்கள் குறிப்பிட்டுள்ள கழக கொடிக்கம்பம் குறித்து மாவட்ட செயலாளர் சகோதரர் சிற்றரசு அவர்களிடம் பேசினோம். ‘அந்தக் கொடிக்கம்பம் அங்கிருந்து விரைவில் அகற்றப்பட்டு, அதே பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வேறு இடத்தில் அமைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். நன்றி." என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், விடாத அறப்போர் இயக்கம், "நடைபாதையை ஆக்கிரமித்து திமுக கொடி கம்பம் வைத்ததாக திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு, அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சட்டவிரோதமாக கொடி கம்பத்தை நிறுவிய Chennai Poles Private Limited நிறுவனம் ஆகியோர் மீது அறப்போர் இயக்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. 

இந்த கொடி கம்பம் வைப்பதற்காக உடைத்து போடப்பட்ட தெரு விளக்கு, காவல்துறை CCTV மற்றும் அறிவிப்பு பலகையை கொடி கம்பத்தை அகற்றிவிட்டு மீண்டும் நிறுவ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறை அதிகாரிகள் துணிவுடன் FIR பதிவு செய்வார்களா? ஆளுங்கட்சியின் இந்த அராஜக ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழகத்தின் மற்ற கட்சிகள் குரல் கொடுப்பார்களா?" என்று கேள்வி எழுப்பியது.

தற்போது கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில், "கொடி கம்ப மேடை நடைபாதையில் இருந்து அகற்றப்பட வேண்டும்.  கம்பத்தை திறந்து வைக்க விழா கொண்டாடி ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் மீது FIR பதியப்பட வேண்டும். இனி ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்க தமிழக காவல்துறை, ஆளுங்கட்சி மீது பயம் இல்லாமல் பணி புரிய வேண்டும்" என்று அறப்போர் இயக்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbil Mahesh Arappor iyakkam issue DMK


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->