தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து தினகரனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த அமமுக முக்கிய புள்ளி.! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தல் முடிவுகள் அமமுக-வுக்கு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என அக்கட்சியினர் கூறிவந்த நிலையில், டெபாசிட் இழந்தது கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், அதிமுக தொண்டர்கள் 95% பேர் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்று டிடிவி தினகரன் கூறி வந்தார். இந்த தேர்தல் முடிவால் பேரதிர்ச்சியில் உள்ளனர். இதனால் அமமுக நிர்வாகிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தாவி வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு தங்கதமிழ்செல்வன், தினகரனை விமர்சனங்கள் செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். தற்போது முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அமமுக வேலூர் மாவட்ட அமைப்புச் செயலாளருமான ஞானசேகர் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஞானசேகர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நான்கு முறை எம்எல்ஏ ஆக இருந்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk gnanasekaran may be join dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->