'சிறையில் இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவங்க இல்ல.' அமித்ஷா குஜராத் சிறைச்சாலையில் உரையாடல்.! - Seithipunal
Seithipunal


நமது சமூகத்தில் சிறையில் இருப்பவர்களின் மீதான பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார். 

குஜராத் அகமதாபாத்தில் ஆறாவது அகில இந்திய சிறைச்சாலை சந்திப்பு நிகழ்ச்சி இன்று துவங்கியது. இது மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதன், துவக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். 

அப்பொழுது, அவர் பேசிய போது, "முதல் சிறைச்சாலை சந்திப்பு நடந்த பொழுது பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்தார். நான் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தேன். தற்போது இரண்டாவது முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது  அவர் நாட்டின் பிரதமராகவும், நான் மத்திய அமைச்சராகவும் இருக்கின்றேன். 

உங்கள் அனைவரையும் இப்பொழுது சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது சமூகத்தில் சிறைச்சாலையில் இருப்பவர்கள் மீது பார்வை மோசமானதாக இருக்கிறது. யாரும் பிறக்கும்போது குற்றவாளியாக பிறப்பதில்லை. சூழ்நிலைதான் அவர்களை குற்றவாளியாக்குகிறது. ஆனால், சமூகம் தொடர்ந்து சீராக செயல்பட வேண்டும் என்பதுதான் நடைமுறை. 

இயற்கையிலேயே, பிறவிலேயே குற்றங்களில் அடிக்கடி ஈடுபடுபவர்கள் தவிர மற்றவர்களை சமூகத்தில் மீண்டும் சேர்க்கும் பொறுப்பு சிறை நிர்வாகத்திற்கு இருக்கின்றது. பிரதமர் மோடியால் இந்தியாவின் வலிமை மந்திரம் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து சிறைச்சாலைக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு சிறைச்சாலை நிர்வாகத்திற்கு இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitsha speech in Gujarat Jail


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->