தி காஷ்மீர் ஃபைல்ஸ்  - பிரதமர் மோடி தலைமை குறித்து அமித்ஷா பரபரப்பு பேச்சி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் பகுதியைத் தீவிரவாதம் எப்படி கைப்பற்றியது என்பதை தெரிந்துகொள்ள, காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை பாருங்கள் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் இந்த காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாராட்டிய நிலையில், இன்று குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கியதாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை போல வலிமையான தலைவர், எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்ட நேரம்,அது என்றும் அமித்ஷா அப்போது பேசினார்.

மேலும், பிரதமர் மோடியின் தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை, அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளது என்று, அமிர்ஷா அந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMITHSHA SAY ABOUT PM MODI AND THE KASHMEER FAILS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->