நாளை முதல் மழைக்கால கூட்டத்தொடர்.. டெல்லியில் இன்று முக்கிய கூட்டம்.!! தயாராகும் எதிர்க்கட்சிகள்!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை புதிய நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரின் போது, தபால் சேவைகள் மசோதா, பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா, சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா, தற்காலிக வரி வசூல் மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழக மசோதா, தேசிய பல் ஆணைய மசோதா, தேசிய செவிலியர் ஆணைய மசோதா, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, திரைப்படம் சட்ட திருத்த மசோதா, பத்திரிகை பதிவு மசோதா போன்றவை உட்பட 21 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் முதற்கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. நேற்று எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்ற நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் ஆசிரியர் பணி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று மழைக்கால கூட்டத்தொடருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All parties meeting today regarding monsoon session


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->