பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அனைத்து கட்சிகள் கூட்டம்.!!
All parties meeting held on tomorrow
ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஆனது வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் மக்களவை பொது தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் நாளை அனைத்து கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்திற்குள் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன.
அதே வேளையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
English Summary
All parties meeting held on tomorrow