மதுரை மாநாட்டிற்கு சிறப்பு ரயில்! வட மாவட்ட அதிமுக தொண்டர்கள் நிம்மதி!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த மாநாட்டிற்கு இலட்சக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்து அதற்கான தொகையை தென்னக ரயில்வே அதிகாரியிடம் செலுத்தி உள்ளனர். 

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்களை சிறப்பு ரயில் மூலம் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

நீண்ட தூர பயணம் என்பதால் தனி வேன், பேருந்துகள் வாடகை எடுப்பதில் அதிக செலவாகும் என்பதால் சிறப்பு ரயில் இயக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். 

சென்னையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் போன்று மற்ற வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை* விழுப்புரம் ஆகிய மாவட்ட அதிமுக தொண்டர்களையும் அலைச்சல் இன்றி மதுரைக்கு அழைத்து வர மற்றொரு சிறப்பு ரயிலை முன்பதிவு செய்ய அதிமுக தரப்பு திட்டமிட்டுள்ளது.

மேலும் மதுரையின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு அதிமுக தரப்பு முன்பதிவு செய்துள்ளது. அதிமுக மாநாடு நடைபெறும் இடத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கட்டணமின்றி உணவு விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. உணவு ஏற்பாட்டை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஏற்றுக்கொண்டதாக தெரிய வருகிறது. இதனால் அதிமுக மாநாட்டிற்கு செல்லும் அதிமுக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK plan to special train for Madurai state conference


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->