முதியோர் ஓய்வூதியம் நிறுத்திவிட்டு எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி.. அதிமுக பகிரங்க குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வழங்கப்படும் முதியோர்களுக்கான ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். அதே போன்று சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பல செய்திகள் வலம் வந்தன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து தற்பொழுது திமுகவின் மாணவர் அணி தலைவராக இருக்கும் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "பச்சை பொய் பழனிச்சாமி அவர்களே முதியோர் ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டதாக பொய் பேசாதீர்.. நிரூபிக்க தயாரா பழனிச்சாமி..?? என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு அதிமுகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு மாதம் ரூ.1000, முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.1,500, ஆசிரியர்க்கு பழைய ஓய்வூதியம் என சொன்னது யார்? உங்கள் தற்போதைய தலைவர் பச்சை பொய் ஸ்டாலின். நீங்கள் உண்மை சொல்பவர் தானே, ஒரு கேள்வி எடப்பாடியார் ஆட்சியில் முதியோர் ஓய்வூதியம் வாங்கிய அனைத்து முதியவர்களுக்கும் விடியா அரசு உதவித்தொகை வழங்குகிறதா..?? முதியோர்க்கு உதவித்தொகை நிறுத்துவது பெற்றோரை பட்டினியிடுவது போன்றது.

சிலிண்டர் வைத்திருந்தால், நகைக்கடன் பெற்றிருந்தால், பாகப்பிரிவினை செய்திருந்தால், ரேஷனில் சீனி அட்டை இருந்தால் உதவித்தொகை இல்லை என்ற புதிய கட்டுப்பாடுகள் பெயரில் முதியோர் ஓய்வூதியம் இல்லாமல் செய்ததுதான் விடியா அரசின் சாதனை. திமுகவினருக்கு மனசாட்சி கிடையாது, இருந்தாலும் அண்ணன் சீமானிடம் இருந்தவர் என்பதால் கேட்கிறேன். எங்கள் பாட்டியின் சுருக்கு பைக்கு செல்லும் 1000 ரூபாயை நிறுத்திதான், நீங்கள் கோடிகளில் வாட்ச் வாங்க வேண்டுமா அல்லது எழுதாத பேனாவுக்கு 80கோடி செலவிட வேண்டுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இணையதளவாசிகளும் அதிமுகவினரும் முதியோர் ஓய்வூதியம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK and DMK admins argued about old age pension scheme


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->