நாளைய வாக்கு எண்ணிக்கை.. "இன்று ஆட்சியருடன் ரகசிய சந்திப்பு".. பரபரப்பில் தென்காசி.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீது ஜூலை 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் தபால் வாக்கு பதிவு செய்த எண்ணிக்கையில் குளறுபடி நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே 10 நாட்களுக்குள் தபால் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு செலவுக்காக பணக்காரருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நாளை தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக செயல்படும் வரி தெரிவித்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக மதுரை மண்டல ஐடிவி செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் "தென்காசி தெற்கு கழக மாவட்ட செயலாளர் அண்ணன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், தென்காசி சட்டமன்ற தொகுதியின் தபால் ஓட்டுகளை ஆட்சியர் முன்னிலையில் நாளை (11/07/2023) எண்ணுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு திமுகவின் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் மற்றும் காங்கிரஸ் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் என்பவர்ரும் இன்று மாலை தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசியதாக செய்திகள் வருகிறது. அப்படி சந்தித்திருந்தால் இந்த சந்திப்பின் அவசியம் என்ன?

நாளை நடக்கும் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் சாதகமாக மாற்ற முயற்சிக்கும் இந்த செயல் சட்ட விரதோமானது. ஜனநாயகத்திற்கு எதிரான இச்செயல் பெரும் கண்டணத்திற்கு உரியது. நாளை நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் நீதிமன்ற மேற்பார்வையும் அவசியமாகிறது" என பதிவிட்டுள்ளார். நாளை தபால் வாக்கு எண்ண உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ சந்தித்திருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK alleged Tenkasi MLA and District Collector


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->