9 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் தேர்தல் தொடங்கியது.! - Seithipunal
Seithipunal


9 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் கடந்த 2016 ஆம்  ஆண்டுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில், தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மற்றும் டிசம்பர் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. 

சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில், முதல் கட்டமாக 91 ஆயிரம் ஊரக - உள்ளாட்சி பதவி இடங்களுக்கு இன்று( டிசம்பர் 27 ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிளும் தேர்தல் தொடங்கியது.  

இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில், ஆயுதப்படை காவலர்கள் உட்பட 63 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல, காவலர்கள் அல்லாத 14 ஆயிரத்து 500 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக, காவல் துறை அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் திங்கட்கிழமை(டிசம்பர் 30) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after 9 years local body election in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->