'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் என்று சசிகலா பயன்படுத்துவது தொடர்பாக, அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி வந்துள்ள சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என்று, கடந்த சில மாதங்களாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிடும் அந்த அறிக்கைகளில், 'அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா' என்ற வாசகம் இடம் பெற்று வருகிறது. இது அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தபோதிலும், இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக, அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று,  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம், 'சசிகலா மீது அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதை எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்' என்று, மாம்பலம் காவல் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Vs Sasikala Case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->