அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நுழைந்த பாஜக! சிறப்பான பதிலடி கொடுத்த முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் - இபிஸ் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

மேலும் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை இறக்கி உள்ளதால், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக இரு அணிகளில் ஆதரவு யாருக்கு தெரிவிப்பது என்று பாஜக பெரும் குழப்பத்தில் உள்ளது. இந்த நிலையில, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் இன்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-யை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.டி ரவி, தமிழகத்தின் நலன் கருதி அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று இருவரிடமும் வலியுறுதியாக பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், அதிமுக ஐடி விங் மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது ட்விட்டர் வலைதளத்தில் பாஜகவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில், அதிமுக என்ன செய்ய வேண்டும் என்பதை பாஜக சொல்ல வேண்டியதில்லை. பாஜக ஒரு தேசிய கட்சி என்பதால் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா? கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் பாஜகவினர் ஏற்றுக்கொள்வார்களா?

திமுகவை எதிர்த்து ஒரு தேர்தலில் கூட தனித்து வெற்றி பெறாத நீங்கள் அதிமுகவுக்கு அறிவுரை கூறுவதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Vs BJP OPS Vs EPS Tamilnadu 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->