அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு கைது : கொந்தளிப்பில் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


இன்று காலை கோவை மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் வருமான வரிதுறை தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும், வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் என்பவரின் வீட்டிலும் காலை முதலே இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. 

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு சோதனைக்கும், போலீசாரின் கைது நடவடிக்கைக்கும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து, ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும், கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK SPV MRC RAID ISSUE EPS Condemn


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->