அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் உறுதியானது.! கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன், அதிமுகவின் தலைமைப் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆகி உள்ளது.

இதேபோல் பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் தேமுதிக வுடன் அதிமுக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக அமையவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சியின் கட்சி ஆறு தொகுதிகளை கேட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்றும், நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம் என்றும் ஏசி சண்முகம் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

இதேபோல், அகில இந்திய மூவேந்தர் முன்னணியும் அதிமுக கூட்டணியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கட்சி 3 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK PUTHIYA NEETHI KATCHI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal