ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை - அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து அதிமுக எம்.பி சி.வி‌.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அண்ணாமலை அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்தும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் பேசியது பெரும் பரபரப்பையை ஏற்படுத்தியது.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக எம்.பி சி.வி. சண்முகம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், எங்களுக்கு பாஜக என்பது வேறு. அண்ணாமலை என்பது வேறு. கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். மோடி மீண்டும் பிரதமராவது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. 

அதேபோல் அண்ணாமலைக்கு அதிமுக பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம். ஜெயலலிதாவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. இதுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ, ஒரு கவுன்சிலராக கூட பதவி வகிக்காதவர். இன்றைக்கு அவர் மீது நாங்கள் குறை கூறவில்லை அவரது கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு  குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

அதேபோல் சாராயம் காய்ச்சுபவர்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்பவர்கள், ஏழை மக்களை ஏமாற்றி பண மோசடி செய்வார்கள் என அனைவரையும் கட்சியில் சேர்த்து அவர்களுக்கு பொறுப்பு வழங்கி தரம் கட்ட அரசியல் செய்பவர் அண்ணாமலை.

ஜெயலலிதா இதுவரை யாரையும் நேரில் சென்று பார்த்ததில்லை ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் மன்மோகன் சிங் வரை அவரை தேடி வந்து சந்தித்தனர். அப்படி ஒரு ஆளுமை மிக்க தலைவரை பற்றி பேசுவதற்கு இந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எந்த வித யோக்கியதையும் இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MP CV Shanmugam roasted BJP annamalai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->