அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு தாவப்போகும் எம்எல்ஏ.? அதிர்ச்சியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எம்.பி சமீபத்தில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  

சசிகலா புஷ்பாவுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பை கொடுக்க டெல்லி தலைமை தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசைக்கு பிறகு நாடார் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சசிகலா புஷ்பாவிற்கு பாஜகவில் முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக இணைந்த சசிகலா புஷ்பாவை கடந்த 5ஆம் தேதி அதிமுக எம்எல்ஏ ஒருவர் அவருடைய வீட்டில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறை மூலம் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

அந்த எம்எல்ஏ தனக்கு அமைச்சர் பதவியும், தன் ஆதரவாளர்கள் ஒருவருக்கு ஆவின் சேர்மன் பதவியையும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார், அது கிடைக்காது. ஆகையால் சசிகலா புஷ்பா பாணியில் பாஜகவில் இணைய போவதாக எடப்பாடிக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla meet sasikala pushpa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->