அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயப்படுகிறது - எடப்பாடி பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வை அறிமுகம் செய்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி தான். நீட் தேர்வை ரத்து செய்ய புதிதாக திமுக அரசு எதையும் செய்யவில்லை.

நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்காதது ஏன்.? நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை திமுக தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்ய திமுக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை.

முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் பற்றியோ, தமிழக மக்களைப் பற்றியோ எந்த வித கவலையும் இல்லை. மதுரை அதிமுக மாநாட்டை கண்டு பயந்து திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக உண்ணாவிரதம் நடத்துவது வேண்டுமென்று நடத்தும் நாடகம்.

இந்தியாவே வியக்கும் வகையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இருக்கும். மாநாடு தொடர்பாக காவல்துறை உள்ளிட்ட துறைகளிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK eps speech about madurai meeting


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->