அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ் - வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal



இந்திய விடுதலைக்குப் பின் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. குறிப்பக ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், கலவரத்தில் முடிந்தது.

இதனையடுத்து 1956-ம் ஆண்டு, நவம்பர் ஒன்றாம் தேதி  இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கணக்கிட்டு, முறையே கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை, கடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்தால் புதியதாக பொறுபேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளான ஜுலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசனை வெளியிட்டது.

இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசனை பிறப்பிக்கும்போது துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ் இன்று வாழ்த்து தெரிவிக்கவில்லை.

சமூகவலைத்தளங்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்ட அதிமுகவினர் மட்டுமே தமிழ்நாடு நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பினர் ஆளும் திமுக அரசு வெளியிட்ட படி ஜுலை 18 அன்றே தமிழ்நாடு நாள் என்று முடிவு செய்துவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Side wish Tamilnadu day OPS Side silent


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->