#BigBreaking | எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை உத்தரவு! - Seithipunal
Seithipunal


அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வழக்கில், அறப்போர் இயக்கம் அவதூறாக பேச தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் எடப்பாடி பழனிசாமி முறைகேடு செய்ததாக, அறப்போர் இயக்கத்தின் சார்பில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தன்னைப் பற்றி உண்மை தன்மை இல்லாத, ஆதாரமற்ற பொய் தகவல்களை கூறி, தன் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைக்க கூடாது. ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது. அவர் குறித்து அவதூறு கருத்துக்களை பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Arappor Iyakkam Case chennai hc 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->