ஒரு ஓட்டுக்கூட பெறாத அதிமுக வேட்பாளர்.. பேரதிர்ச்சியில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதுவரை திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை கரம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இம்ராஹிம் ஷா ஒரு ஓட்டு கூட பெறவில்லை.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது; உசிலம்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில், திமுக 13, அதிமுக 9, அமமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

பழனி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 20ல் திமுக கூட்டணி வெற்றி; அதிமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

கும்பகோணம், சேலம், சிவகாசி, திண்டுக்கல், தஞ்சை, கரூர் ஆகிய மாநகராட்சிகளும் திமுக வசமானது.

தென்காசி நகராட்சியில் 14,15 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்களான அண்ணன், தங்கை வெற்றி பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk candidate who did not get a single vote


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->