மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தும் இபிஎஸ்.. இன்று வெளியாக போகும் அறிவிப்பு.! அதிர்ச்சியில் திமுக.!! - Seithipunal
Seithipunal


சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. மேலும், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலும் தீவிரமாக நடைபெற்றது. இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு சென்னையில் தொடங்கியது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மார்ச் 10ஆம் தேதி திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு, முன்பாக அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட முடிவு செய்துள்ளது. அதோடு நாளை மாலைக்குள் ஒட்டுமொத்த கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து ஒப்பந்தங்கள் செய்யும் முடிவில் அதிமுக இறங்கியுள்ளது. 

வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், கூட்டணி, தேர்தல் அறிக்கை ஆகிய மூன்று விஷயங்களும் முக்கியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருதுவதாக கூறப்படுகிறது. இந்த மூன்றையும் வேகமாக செய்து முடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளனர்.

திமுகவிற்கு முன்பு அனைத்தையும் முடித்துவிட்டு, பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்பதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதிலும், இன்று அதிமுக வெளியிலிருக்கும் வேட்பாளர் பட்டியலில் பல முக்கிய வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பட்டியல் கண்டிப்பாக திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் பட்டியலாக இருக்கும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk candidate dmk shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->