கவனக்குறைவாக பேசி விட்டேன்.! மன்னிப்பு கேட்ட முக்கிய புள்ளி.!! தேசிய அரசியலில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


இண்டியா கூட்டணியில் முக்கிய கட்சியாக பார்க்கப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திருவண்ணாமலை காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது. 

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திறியாமல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீடு பிரச்சனை தான். இந்த விவகாரத்தில் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ.ப்ரைன் மேற்குவங்க மாநிலத்தில் கூட்டணி உடன்பாடு எட்டாததற்கு காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி தான் காரணம் என குற்றம் சாட்டு இருந்தார்.

அதற்கு அதீர் ரஞ்சன் சௌத்ரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே அதற்கு பதில் அளித்த அவர் டெர்ரி ஒ.ப்ரைன் ஒரு வெளிநாட்டவர் அவருக்கு இதைப்பற்றி என்ன தெரியும் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ள அதீர் ரஞ்சன் சவுத்ரி "செய்தியாளர்கள் சந்திப்பில் தெரியாமல் காங்கிரஸ் எம்பி டெர்ரி ஓ.ப்ரைன் பெயரை குறிப்பிடும் போது வெளிநாட்டவர் என்று கவனிக்க குறைவாக பேசி விட்டேன். அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adhir Ranjan chowdhury apologized TMC MP Derek I brain


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->