கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்.. பாஜகவுக்கு ஆதரவை அறிவித்த MLA நடிகை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் மாண்டியா தொகுதியுடைய நடிகையும், சுயேச்சை எம்.பியுமான சுமலதா அம்பரீஷ் தற்போது பாஜகவுக்கு தன்னுடைய ஆதரவை வழங்கியுள்ளார்.

 பிரதமர் நரேந்திர மோடி மைசூரு - பெங்களூருக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பத்து வழிச்சாலையை திறந்து வைக்க மாண்டியா தொகுதிக்கு வருகை தர இருக்கின்றார். இந்த நிலையில் நடிகை சுமலதா அம்பரீஷ் பாஜகவுக்கு தான் ஆதரவு அளிப்பதாக அறிவித்து இருக்கின்றார்.

இதுபற்றி அவரது கூற்றுப்படி, தான் அரசியலில் நீடிக்கின்ற வரையில் தன்னுடைய மகன் அபிஷேக் அரசியலுக்கு வரமாட்டார் எனவும், தான் வாரிசு அரசியலுக்கு எதிரானவர் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி இந்த 10 வழி சாலையை திறந்து வைக்க மாண்டியாவிற்கு வருவது மாண்டியா தொகுதிக்கு கிடைத்த புண்ணியம் என்றும் கூறியுள்ளார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டுமென பாஜகவில் அவர் இணைய போவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் தான் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sumalatha support to bjp


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->