நடிகர் விஜய் பாஜகவுக்கு ஆதரவா? - நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இதற்காக அவர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கான அதிகப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடும் அறிக்கையில் அவ்வப்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்புகிறது.

அதேபோன்று தமிழக வெற்றிக்கழகம் பெயரில் பல்வேறு போலி சமூக வலைதள பக்கங்களும் செயல்பட தொடங்கியுள்ளன. அவற்றில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் லெட்டர் பேட் போன்ற உருவாக்கி அதில் பல்வேறு பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஒரு போலி லெட்டர் பேடில் "நடிகர் விஜய் உடன் ஏற்பட்ட முதல் காரணமாக புஸ்ஸி ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக ஒரு லெட்டர் பேட் வெளியானது. 

அதனைத் தொடர்ந்து தேச நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் வருவதற்கு வாக்களிக்க வேண்டும் என விஜய் கூறுவது போல ஒரு போலி அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இவ்வாறு அடுத்தடுத்து போலி அறிக்கைகள் அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ளதால் அதிர்ச்சிி அடைந்த நடிகர் விஜய் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வயல்கள் வெளியாகி உள்ளது. எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ActorVijay ordered to lodge complaint on BJP support rumour


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->