தோழர்கள் என்றே அழைக்க வேண்டும்.!! த.வெ.க நிர்வாகிகளுக்கு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளை ”தோழர்கள்” என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆலோசனை கூட்டம் துவங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட உறுதி மொழியில் "நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம்,மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராகச் செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன் .சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை கலளந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருமக்கும் சம வாய்ப்பு,சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி அளிக்கின்றேன்” என தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay advice call cadres as thozhar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->