திமுக அரசியலில் குடும்ப பாரம்பரியம் உள்ளது - நடிகை குஷ்பு ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


திமுக அரசியலில் குடும்ப பாரம்பரியம் உள்ளது - நடிகை குஷ்பு ஆவேசம்.!

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில், மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முக்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக உறுப்பினருமான குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக மகளிர் மாநாடு, வாரிசு அரசியலின் உச்சம். திமுக மகளிர் மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பெண் தலைவர்களுக்கும், அரசியலில் குடும்ப பாரம்பரியம் இருக்கிறது. எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இணைய குடும்ப அரசியலின்றி தானாக முன்னேறிய பெண்கள் யாரும் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kushboo post against dmk womans urimai maanadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->