கட்சி சின்னத்தை அறிவித்த கமல்ஹாசன் - என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்காக இரு கட்சியினரிடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மற்றும் தென் சென்னை உள்ளிட்ட இரண்டு தொகுதிகளை கேட்டு வருகிறது. 

இந்தத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றாவது கிடைக்குமா? என்று கமல் கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. 

அந்தகூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டி. அது கிடைக்காவிட்டால் தனிச்சின்னத்தை கேட்டு பெறுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamalhasan announce political party logo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->