ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! தயாரான சபாநாயகர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற போது அதிமுக இரண்டாக பிரிந்தது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. அதையடுத்து ஓ பன்னீர்செல்வம் அணியினர் சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. 

அந்த தீர்மானத்தில் முதலமைச்சருக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், நடராஜ் ஆகிய 11 எம்எல்ஏக்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். 

இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 11 எம்எல்ஏக்களை  நீக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்தது. 

இதனை எதிர்த்து, திமுக கொறடா சக்கரபாணி, தங்கத்தமிழ்செல்வன் ஆகிய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று சபாநாயகருக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து திமுக சார்பு இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது சபாநாயகர் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 mlas case in supreme court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->