இரு சக்கர வாகனங்களில் பின்புற இருக்கை உயரமாக அமைக்கப்பட காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சாதாரண வண்டிகளில் பின்னால் உட்காருபவர்களின் இருக்கை மிகச்சிறிய உயரமே இருக்கும் அல்லது இருக்காது.

இந்த வகை வண்டிகள் அதிவேகமாக செல்லாது. இருக்கைகள் சமமாக இருப்பதால் வண்டியின் பாரமும், உட்காருபவர்களின் பாரமும் இரு சக்கரங்களுக்கு இடையே மட்டுமே விழும். அதனால் வாகனத்தின் நிலைப்புத் தன்மை அதிகம் கிடைக்கும். வாகனம் கீழே விழும் வாய்ப்பும் குறைவு.

அதிவேக வண்டிகளுக்கு காற்று தடைகளை குறைக்க முன்பகுதி சிறிது கூம்பியும், பின்பகுதி குறுகியும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஏரோ டைனமிக் என்பது இதன் பெயர்.

வேகமாக செல்வதால், குறுகிய வளைவுகளில் எளிதாக திருப்ப, வளைந்து நெளிந்து செல்ல, அதன் மையப்புள்ளி வண்டியின் நடுவில் இருக்க வேண்டும். 


பின்னால் உட்காருபவரின் பாரம் வண்டி வளைந்து வேகமாக செல்லும்போது, அதற்கு தகுந்தாற்போல வண்டியின் இரு பக்கமும் மாறும்.

அதனால் வண்டியின் நிலைப்புள்ளி இரு சக்கரங்களுக்கு வெளியில் செல்லும். இதன் விளைவாக வண்டி சாய்ந்து விழுந்து விடும் நிலை ஏற்படும். இதைச் சரி செய்ய, பின்னால் அமரும் இருக்கையை உயரமாக்கினால் அதில் அமரும்போது, அமருபவர் முன்பகுதி சாய்ந்து அமரவேண்டிய கட்டாயம் வரும். 

இதனால் அமருபவரின் மையப்புள்ளி இரு சக்கரங்களுக்குள்ளே மட்டும் விழும், வண்டியின் நிலைப்புத்தன்மையும் அதிகரிக்கும்.

வேகமாக ஓட்டும்போது வாகனத்தில் அமருபவர்களும் முன்னோக்கி சாய்ந்திருப்பதால், அவர்களின் மீது விழும் காற்றுத் தடையும் குறையும். அதனால்தான் பின்புற இருக்கை அதிவேக வண்டிகளில் மட்டும் உயரமாக அமைக்கப்பட்டிருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is the reason for rear seat height in two-wheelers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->