டிவி, மொபைல் பார்த்துக்கொண்டு சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்தா.?! இனி மறந்தும் இதை செய்யாதீர்கள்.!  - Seithipunal
Seithipunal


லேப்டாப், டிவி, மொபைலை பார்த்துக்கொண்டு சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி தற்போது காண்போம்.

பொதுவாக உணவு சாப்பிடும்போது டிவி, மொபைலை காணாமல் சாப்பிட்டால் மூளை அமைப்பு நிலையை உணர்ந்து அளவாக சாப்பிட முடியும். ஆனால் திரையை பார்த்துக் கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது சாப்பிடும் அளவு தெரியாது.

அலுவலக பணி முடிந்து வீடு திரும்பும் இளைய சமுதாயத்தினர் பலரும் தற்போது டிவி, ஸ்மார்ட்போன் பார்த்துக் கொண்டு இரவு உணவை சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். இல்லையெனில் லேப்டாப்பை இயக்கியபடி சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

இவ்வாறு சாப்பிடுவதன் மூலமாக கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீதே பதிந்திருக்கும். சாப்பிடும் உணவின் வாசனை மற்றும் சுவையை உணராமல் திரையைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால் சாப்பிடும் அளவும் தெரியாமல் இருக்கிறது. 

கவனம் முழுவதும் திரையில் தென்படும் காட்சிகளில் மீது பதிந்திருப்பதால் மூளை சமிக்ஞையை உணராமல் சாப்பிட்டு முடிப்பார்கள். அத்துடன் நன்றாக மென்று சாப்பிடாமல் விரைவில் சாப்பிடுவதால் வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

திரையை பார்த்துக் கொண்டே சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கும்?

தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். எவ்வளவு சாப்பிட்டீர்கள்? என்று மூளை பதிவு செய்யாத காரணத்தால், சாப்பிட்ட திருப்தி இருக்காது. இதனால் ஒரு மணி நேரத்திற்குள்ளே மீண்டும் பசி எடுக்க தொடங்கிவிடும்.

உடனடியாக பசிப்பதால் சிப்ஸ், சாக்லேட் போன்றவற்றை சாப்பிட்டு வயிறை நிரப்பிக் கொள்வீர்கள். அத்துடன் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் மிகவும் ருசியாக இருப்பது போல் உங்களின் மூளைக்கு தோன்றுவதால் இனிப்பு பொருட்களின் மீது நாட்டம் அதிகரிக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பதுடன் சோம்பல்தனமும் அதிகமாகும்.

அன்றாட பழக்க வழக்கங்களின் படி எப்படி சாப்பிடுவது நல்லது ?

எவ்வித உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அத்துடன் சாப்பிடும் உணவு எந்த பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது? என்பதனை அறிந்து, சுவை மற்றும் நறுமணத்தை நுகர்ந்து உண்ணவேண்டும். 

நீங்கள் வயிற்றிற்கு தேவையான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்று மூளை உணர்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்று உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். அதற்கேற்றார்போல் உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம் மூளைக்கு சமிக்ஞை செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும்.

இதனால் அதிகமாக சாப்பிடுவதையும் தடுத்து நிறுத்தி, உடல் பருமனை அதிகரிக்காமல் தடுக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை விட, எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது தான் தற்போதைய காலகட்டத்தில் முக்கியமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tv paarthu saaptiduvathal erpadum prachanai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->