உங்கள் கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்ய இயற்கையா இந்த பொருட்கள் எல்லாம் பயன்படும்..! - Seithipunal
Seithipunal


கூந்தல் உதிர்தல், கூந்தல் வறட்சி, கூந்தல் நுனியில் வெடித்தல், பொடுகுத் தொல்லை  போன்றவை பெரும்பாலனருக்கு பிரச்சனையாக இருக்கும். இயற்கை பொருட்களை பயன்படுத்தி எப்படி கூந்தலை எப்படி பொலிவாக்குவது என பார்போம்.
 
வெந்தயம் :

வெந்தையத்தை ஊறவைத்து அதனை தடவி 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.  இதனால், தலை குளிர்ச்சி அடைவதோடு கூந்தலை பளபளப்பாக்கும்.

வேப்பிலை மற்றும் துளசி  :

வேப்பிலை மற்றும் துளசி அரைத்து கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர பொடுகுத் தொல்லை மற்றும் பேன் தொல்லை நீங்கும்.

கற்றாழை :

கற்றாழையுடன் தயிர் கலந்து, முடியின் வேர்கால்களில் படும் படி தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர தொல்லை நீங்குவதோடு முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்பு நீங்கி கூந்தல் பளபளப்பாக்கும்.

தேங்காய் பால் :

தேங்காய் பாலை முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர கூந்தல் பளபளப்பாக்கும்.

அதுமட்டுமின்றி மாசுக்களில் இருந்து கூந்தலை பாதுகாப்பது, புரதசத்து அதிகம் உள்ள உணவை எடுத்து கொள்ளுவது போன்றவற்றையும் நாம் மேற்கொள்ளால். வெளிபுற அழகிற்கு மெனக்கடுவது போல உணவுகளையும் எடுத்து கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thisi Products helps Hair care


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->