ஹெல்மேட் வாங்கும் போது நாம் கவனித்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.! - Seithipunal
Seithipunal


தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பது போன்ற வாசகங்கள் போக்குவரத்து காவலர்களாலும் அரசு மற்றும் சமூக செயல்பாட்டாளர்களால் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது. இந்த  வாசகங்கள் தான் உண்மையும் கூட. பெரும்பாலான நபர்கள் காவல்துறையிடம் பைன் கட்ட வேண்டும் என்பதற்காகவே ஹெல்மெட் அணிகின்றனர். ஹெல்மட்டை நம் பாதுகாப்பு கருதி வாங்க வேண்டும் அணிய வேண்டும் அதுதான் சிறந்தது. நம் தலை மற்றும் உயிரை காக்கக்கூடிய ஹெல்மட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று பார்ப்போம்.

இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதுதான் நமக்கு பாதுகாப்பு . நாம் வாங்கும் ஹெல்மெட் நமது தலைக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். நமது தலைக்கு மிகவும் பெரியதாகவோ அல்லது சிரமப்பட்டு தலையில் பொருத்தும் அளவில் இருக்கக் கூடாது.

ஹெல்மெட் வாங்கும் போது நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய மற்றொரு விஷயம் அந்த ஹெல்மெட்டில் ஐ எஸ் ஐ முத்திரை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். மேலும் டாட் மற்றும்  இ எஸ் இ தரச் சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டா என்றும் பரிசோதித்து பார்த்து வாங்க வேண்டும். பைக் பந்தயங்களில் ஓட்டுபவர்களும் தொழில்முறை ரேசர்களும்  இந்த மாதிரியான தரச் சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகளை தான் பயன்படுத்துகின்றனர்.

ஆண் பெண் இருபாலருமே முகத்தை கவர் செய்யும்  ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டை விரும்புவதில்லை. ஆனால் அதுதான் மிகவும் பாதுகாப்பான தொலைக்கவசம். இது நமது முகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதோடு வாகனத்தை செலுத்தும் போது ஏற்படும் பூச்சிகளின் இடையூரில் இருந்தும் பாதுகாக்கிறது.

பொதுவாகவே ஹெல்மெட்டுகள் மூன்று வகைப்படும் . ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டுகள் ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்டுகள் மற்றும்  மாடுலர்   ஹெல்மெட்டுகள் என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் புல் ஃபேஸ் ஹெல்மெட்டுகள் நம் தலை மற்றும் முகத்தை முழுவதுமாக கவர் செய்து இருக்கும் . இவைதான் மிகவும் பாதுகாப்பானவை. ஓப்பன்  ஃபேஸ்  ஹெல்மெட்டுகள் நமது தலைக்கு மட்டும் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இருக்கும். இவை பயணம் செய்வதற்கு இனிமையாக இருந்தாலும் நமது முகத்திற்கு பாதுகாப்பு இல்லை. மாடுலர் வகைகள் ஹெல்மெட்டுகளை ஃபிலிப்  பட்டன் மூலம்  புல் ஃபேஸ் மற்றும் ஓபன் ஃபேஸ்புக்கில் மட்டும் ஆக பயன்படுத்த முடியும். இந்த விஷயங்கள் எல்லாம் நீங்கள் ஹெல்மெட் வாங்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Things to keep in mind while buying a helmet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->