தனிமையில் அதிக பயம், பதட்டம் ஏற்பட காரணம் என்ன தெரியுமா?! இவர்கள் எல்லாம் பயந்தால் அவ்வளவு தான்!!  - Seithipunal
Seithipunal


அடர்ந்த வனப்பகுதி அல்லது ஆளரவமற்ற ஒத்தையடி சாலையில் நள்ளிரவில் நடந்து செல்லும்போது சில தூரங்கள் நாம் பயப்படாமல் சென்று கொண்டிருப்போம். அந்த நேரத்தில் திடீரென ஒரு சத்தம் பின்னால் பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள்.

சிறிது தூரம் நடந்திருப்போம்., அதே சத்தம் உடலில் உயிர் போராட துவங்கும்., நெஞ்சு ஏதோ ஒரு விதமான பயத்தில் பக்.. பக்.. என்று இருக்கும். இது போன்ற நேரத்தில் மரண பயத்தை ஏதோ ஒரு சூழ்நிலையில் அனுபவிக்காமல் இருப்பவர்கள் இந்த மரண பயத்தை அறிந்துகொள்ள இயலாது. 

மரண பயம் ஏற்படும் சமயத்தில் ஒருவரது உயிரானது பயப்படும் என்று கூற இயலாது. அந்த சமயத்தில் பயம் தொடர்பான கார்டிசோல் (Cortisol), அட்ரலின் (Adrenaline) சுரப்பிகளின் செயல்களானது அதிகரித்து சில மணித்துளிகளில் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறும். மேலும் ஒரு நபர் தனிமையில் கடும் பயத்துடன் வாழ்கிறார் என்றால் அவருக்கு இந்த சுரப்பிகளின் மூலம் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவு அதிகமாகவே இருக்கும். 

நமக்கு மரண பயம் ஏற்படும் நேரத்தில்., இதயத்தின் துடிப்பு வழக்கத்தை விட அதிகமாகவும்., உடலின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வியர்வை ஆறாக ஓடுவதையும்., மார்பு பகுதி வழக்கத்தை விட இறுக்கமாக மாறி மூச்சு விடுவதற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உடலின் நடுக்கத்தை அதிகப்படுத்தும். 

பயத்தை பொறுத்த அளவு பயம் என்றைக்கும் யாரையும் கொன்று விடாது. ஒரு சில இதயம் சம்மந்தமான நோய் உள்ளவர்கள்., அதிகளவு இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருப்பது நல்லது. இந்த நோய் உள்ளவர்கள் திடீரென அதிகளவு பயத்திற்கு உள்ளாவதால்., அவர்களுக்கு மரணம் அல்லது மாரடைப்பு மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக இதயம் சம்மந்தமான கோளாறு உள்ளவர்களின் உடல்., இதயம் மற்றும் மூளைகளில் திடீரென ஏற்படும் பயத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால்., இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பிகளின் திடீர் மாற்றத்தால் வயதானவர்களுக்கு மாரடைப்பு மற்றும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

English Summary

reason of alone and fear


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal