கணவர்களை குஷிப்படுத்த, காரசாரமான மிளகாய் வடை..! எப்படி செய்வது.!  - Seithipunal
Seithipunal


பொதுவாகவே காரமான உணவு வகைகளை ஆண்கள் மிகவும், விரும்பி சாப்பிடுவர், அந்த வகையில், இன்று காரசாரமான மிளகாய் வடை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையானவை:

சிவப்பரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப்
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

சிவப்பரிசி, துவரம் பருப்பை ஒன்றாக சேர்த்து 25 நிமிடம் ஊற வைக்கவும்.

அதன் பின்பு அரிசி - பருப்புடன் பட்டை, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

மாவை வழித்தெடுக்கும் முன் பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த மாவை வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான மிளகாய் வடை தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

milaka vadai preparation for husband


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->