80/- ரூபாய் செலவில் அற்புதமான தீவு சுற்றி பார்க்க ரெடியா? வாங்க தெரிஞ்சிக்கலாம்! - Seithipunal
Seithipunal


கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள குளுகுளுவென்று ஒரு சுற்றுலா தளத்தை தேடுகிறீர்களா.? அப்படி என்றால் உங்களுக்குத்தான் இந்த இடம் பொருத்தமாக இருக்கும். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு சந்தோஷத்தை கொடுக்கும் இந்த இடத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள  முஹம்மா ஊராட்சிக்கு சொந்தமான இடம்தான் வேம்பநாடு ஏரி. 2002 ஆம் ஆண்டின் ராம்சார் ஒப்பந்தத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஏரிக்கு நடுவே உள்ள தீவுதான் நாம் செல்ல போகும் இடமாகும்.

மேற்குவங்க மாநிலத்தின் சுந்தரவணக்காடுகளுக்குப் பிறகு  இந்தியாவின் மிகப்பெரிய ராம்சார் தளமாக விளங்குவது இந்த ஏரியாவும். இதனை சுற்றி முழுவதுமாக நீராக இருந்தாலும் நடுவே சுமார் 208 பேர் பரப்பளவில் பாதிரா மணல் என்ற தீவு உள்ளது. முன்னர் பத்மநாபன் தோப்பு என அழைக்கப்பட்டு தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதி தற்போது அரசுடைமையாக்கப்பட்டு வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அனைத்து பக்கங்களும் கடலால் சூழப்பட்டுள்ள இந்த தீவிற்கு அதிகமான பறவை கூட்டங்களும் பறவை வகைகளும் வருகை புரிகின்றன. பறவை ஆர்வலர்களும் பறவையை விரும்புவோர்களும் இந்த தீவுக்கு தாராளமாக செல்லலாம். இந்த தீவிற்கு முகம்மா படகு இல்லத்திலிருந்து படகு போக்குவரத்து இருக்கிறது. முப்பது முதல் ஒன்றரை மணி நேர பயணத்தின் மூலம் இந்த தீவை அடையலாம். இவற்றிற்கு செல்ல கட்டணமாக 80/- ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is a wonderful island to explore at a cost of Rs Eighty


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->