உடலுக்கு குளிர்ச்சி தரும்... குளு குளு இளநீர் பாயாசம் செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் பாயாசம்:

பாயாசம் என்கிற பெயரைக் கேட்டாலே நமக்கு எச்சில் ஊறும். அதில் இளநீர் பாயாசம் என்றால் சொல்லவா வேண்டும். இந்த சுவையான இளநீர் பாயாசம் யாருக்கு தான் பிடிக்காது.

பாயாசம் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று... பாயாசத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று இளநீர் பாயாசம்... இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிது. அதே சமயம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும். 

ஜவ்வரிசி, பருப்பு, சேமியா பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான, சூப்பரான இளநீர் பாயாசம் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அடர்த்தியான (திக்கான) பசும் பால் - ஒன்றரை கப் 

அடர்த்தியான (திக்கான) தேங்காய் பால் - 1 கப்

இளநீர் வழுக்கை - அரை கப்

சர்க்கரை (அல்லது) நாட்டுச் சர்க்கரை - ஒன்றரை கப்

ஏலக்காய் (பொடித்தது) - 3

அரைக்க வேண்டியவை :

இளநீர் வழுக்கை - அரை கப்

இளநீர் (அ) தேங்காய் தண்ணீர் - முக்கால் கப்

செய்முறை :

முதலில் மிக்ஸியில் அரை கப் இளநீர் வழுக்கையையும், இளநீரையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். 

பாலை நன்கு காய்ச்சி, கொதித்தவுடன் சர்க்கரை (அ) நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 

பின்பு அடுப்பின் தீயை குறைத்து விட்டு சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். பால் நன்கு சுண்டி வரும் வரை காத்திருக்க வேண்டும். 

பால் சுண்டி வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட வேண்டும். 

பால் நன்கு ஆறிய பின்பு அதில் அரைத்து வைத்த இளநீர் விழுதையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து கலக்கி சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பிறகு சில்லுனு பரிமாறலாம்.

பரிமாறுவதற்கு முன்பு மேற்புறம் இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.

இப்பொழுது சுவையான மற்றும் ஜில்லென்று இருக்கும் இளநீர் பாயாசம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

குறிப்பு :

இளநீர் நல்ல இளசா இருக்கும்படி பார்த்து வாங்கி கொள்ளவும்.

நெய்யில் வருத்த முந்திரி, பாதாம் போன்ற உலர் பழங்களை விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளலாம் இதன் சுவை அதிகமாக இருக்கும்.

பலன்கள் :

இளநீர் பாயாசத்தை நாம் பால் மற்றும் இளநீர் தண்ணீரை கொண்டு செய்வதால் இவை உடம்புக்கு மிகவும் நல்லது. 

உடல் புத்துணர்வுக்கான சத்துக்கள் இளநீர் பாயாசத்தில் இருப்பதால் இதை உண்டு மகிழலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ileneer payasam preparation in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->