முகத்தில் எண்ணெய் வழிகிறதா.? இதை செய்தால் போதும்..! - Seithipunal
Seithipunal


நம்மில் பலருக்கு இருக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஓன்று எண்ணெய் வழியும் முகம். எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.

முகத்தில் அதிகம் எண்ணெய் வடிகிறது என்றால் அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.

தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும். முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை  குறையும்.

தயிர் உடன் தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர எண்ணெய் முகம் பளிச்சென்று மாறும்.

காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெரும். இந்த எளிய தீர்வுகளை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை சரித்து செய்து பொலிவான முகத்தை பெறமுடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to stop oily skin on face


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->