பனிக்காலங்களில் வரும் உடல் பிரச்சனைகளுக்கு இந்த சாதம் மட்டும் போதும்!! - Seithipunal
Seithipunal


மிளகு சாதம் என்று கூறினாலே நமது வாயில் இருந்து எச்சில் வரும். உடலுக்கு தேவையான அவசியம் மாதத்திற்கு 3 முறை எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகளில் இதுவும் ஒன்று. மிளகில் உள்ள நற்செயல்கள் மூலமாக உடலின் நலம் பாதுகாக்கப்படும். 

தொண்டை கரகரப்பு., உடலில் உள்ள சில தீங்கு விளைவிக்கக்கூடிய விஷங்கள் போன்றவற்றை முறிக்கும் வல்லமை இந்த மிளகில் உண்டு. இப்போது மிளகு சாதம் செய்வது எப்படி என்று காண்போம். 

மிளகு சாதம் செய்யத் தேவையான பொருட்கள்: 

அரிசி - 500 கிராம் அல்லது அரை கிலோ., 
மிளகு - 2 தே.கரண்டி அல்லது காரம் விரும்புபவர்களின் அளவிற்கேற்ப.,  
சீரகம் - 4 தே.கரண்டி.,
வெங்காயம் - 2 எண்ணம் அல்லது 3 எண்ணம் (PIECES)., 
முந்திரிப்பருப்பு - 10 எண்ணம் (PIECES)., 
வேர்க்கடலை - சிறிதளவு., 
கறிவேப்பில்லை மற்றும் உப்பு - தேவையான அளவிற்கு. 

மிளகு சாதம் செய்யும்முறை: 

எடுத்துக்கொண்ட வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்., பின்னர் எடுத்துக்கொண்ட அரிசியை நன்றாக சுத்தமான நீரில் கழுவி உளர் சாதமாக எடுத்துக்கொள்ளவும். 

இதற்கு பின்னர் மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்தெடுத்து., நன்றாக அரவை இயந்திரத்தில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். 

அதற்கு பின் வானெலியில் நெய் அல்லது எண்ணையை ஊற்றி கடுகு., வேர்க்கடலை., முந்திருப்பருப்பு ஆகியவற்றை வதக்கிவிட்டு., கறிவேப்பிலையை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதுடன் உப்பு மற்றும் மிளகு சீரகத்தூளை போட்டு அரை நொடி கிளறிவிட்டு., பின்னர் சாதத்தை வானெலியில் போட்டு நன்றாக கிளறி எடுக்கவும். சுவையான உடலுக்கு சத்தான மிளகு சாதம் தயார்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare pepper rice


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal