சத்தான, சுவையான பசலை கீரை பக்கோடா!! எளிமையாக செய்வது எப்படி?! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

 • கடலை மாவு- 1 கப் 
 • பசலைக் கீரை - 1 கட்டு 
 • மிளகாய் தூள் - சிறிதளவு
 • பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்) 
 • எண்ணெய் - தேவைக்கு 
 • உப்பு - தேவைக்கு
 • மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை:

 • கீரையை கழுவி நன்றாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
 • வாயகன்ற பாத்திரம் ஒன்றில், மிளகாய்தூள், கடலை மாவு,மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், ஆகியவற்றை ஒன்றாக கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி, பகோடா மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்.
 • பின்னர் அதனுடன் கீரையை கலந்துகொள்ளவும். வாணலியில் பொரிப்பதற்கு எண்ணையை ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கையில் எடுத்து போட்டு பொரித்து எண்ணெயை வடித்து எடுத்து சூடாக பரிமாறவும். 
 • சுவையான பசலைக்கீரை பகோடா தயார்!! 
English Summary

how to prepare pasalaikeerai pakkoda


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal