படுத்த உடன் தூக்கம் வர வேண்டுமா.? இதோ எளிய வழிகள்.! - Seithipunal
Seithipunal


மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் 7 மணி முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பலருக்கு தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் மற்றும் பிற நோய்களும் காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் சிலருக்கு நோய்கள் இல்லாவிட்டாலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுகின்றனர். அந்த வகையில் படுத்தவுடன் தூக்கம் வர என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

இரவில் தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் உடலில் உள்ள களைப்பு நீங்கி நன்றாக தூக்கம் வரும்.

தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் குடித்தால் நல்ல தூக்கம் வரும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக தூங்குவதற்கு முன்னர் செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். படுத்துக்கொண்டே செல்போன் பயன்படுத்துவதால் தூக்கம் வருவது கடினம்.

மேலும் தூங்குவதற்கு முன்பு அதிகப்படியான உணவுகளை சாப்பிடக்கூடாது. குறிப்பாக சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் இரவில் தூங்குவதற்கு முன்பு 5 நிமிடங்கள் வரை உள்ளங்காலில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to easily sleep in bed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->