வீட்டில் இந்த பொருட்களை தெரியாமல் கூட சிந்திவிடாதீர்கள்.!! - Seithipunal
Seithipunal


நம் வீட்டில் சிறுவர்கள் விளையாடும் போதும், நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் சில பொருட்கள் தவறுதலாக கீழே சிந்திவிடும். அவ்வாறு சில பொருட்கள் சிந்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்...!!

குங்குமம் :

அந்த காலம் முதல் இன்று வரை நம் முன்னோர்கள், வீட்டில் குங்குமம் கொட்டி விட்டால் அன்றைய நாளில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழும் என்பார்கள். ஆனால் உண்மையில் குங்குமம் கொட்டினால் ஏதாவது அசம்பாவிதம் நிகழுமா?

குங்குமம் கொட்டுவது இயல்பான ஒன்று தான் என்றாலும், அன்றைய நாளில் ஏதாவது ஒரு சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கலாம். இவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்டதால், உங்களுடைய மனம் சண்டையிட கூடிய நிலையிலேயே இருக்காது. குங்குமம் கொட்டியதால் இவ்வாறு நடக்கிறது என்று சூழ்நிலையை புரிந்து கொண்டு சண்டைகள் தவிர்க்கப்படும்.

தண்ணீர் :

தண்ணீர் சிந்தினால் கடன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கிறது. சில வீடுகளில் குழாய் சரி இல்லாமல் சொட்டு சொட்டாக தண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும். இந்த அறிகுறிகள் கடன் பிரச்சனையை குறிக்கிறது. இப்படியான அறிகுறிகள் உங்கள் வீட்டில் தோன்றினால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். கடன்களை வாங்கும் முன் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். தேவையற்ற கடன்களை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை வீட்டில் தண்ணீர் சிந்துவதை தவிர்ப்பது மிக மிக நல்லது.

உப்பு :

வீட்டில் தவறுதலாக கூட உப்பை சிந்துவது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். உப்பை சிந்தினால் வீட்டில் சண்டை, சச்சரவுகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை தெரியாமல் உப்பை சிந்திவிட்டால் அன்றைய நாளில் நீங்கள் மௌனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. வரவிருக்கும் சண்டை, சச்சரவுகளை தடுத்து நிறுத்துவதற்காக நிதானத்தை கையாள வேண்டும். 

தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் மனதை சரியான பாதையில் செல்ல விடாமல் தடுத்து விடும். உப்பு சப்பில்லாத விஷயத்திற்கெல்லாம் கோபப்படக்கூடாது என்பதை தான் இந்த உப்பானது நமக்கு எடுத்துரைக்கிறது. 

அரிசி :

வீட்டில் அரிசி கொட்டுவதும் நல்ல சகுனம் அல்ல. அரிசியை சிந்தவிடுவது தெய்வ குறைகளை குறிக்கிறது. நீங்கள் வேண்டிக் கொண்ட ஏதாவது ஒரு வேண்டுதல்களை நிறைவேற்றாமல் விட்டிருக்கலாம். அதனை நினைவுப்படுத்தவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 

இனி அரிசி சிந்தினால் கடவுளுக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை மட்டும் மறக்காமல் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். தெய்வ குறைகள் ஏற்படாமல் இருக்க அரிசியை அளக்கும் பொழுது எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

house tips 5


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal