மீன் சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு ஓர் அசத்தலான செய்தி!! - Seithipunal
Seithipunal


மத்திய மற்றும் மாநில அரசுகள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஆண்டுதோறும் 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் 60 நாட்களுக்கு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்தநிலையில், மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்,   60 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் மீன்களின் வரத்து அதிகரித்தது இதனால் மீன் விலை குறைந்துள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீன் பீடி தடை காலத்துக்கு முன் 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ முரல் மீன் 300 ரூபாய்க்கும், இரால் மீன் ஒரு கிலோ 500 ரூபாயாக இருந்து 250 முதல் 300 ரூபாய்க்கும் விற்பனையாவதாக தெரிவித்தனர். 

இதேபோல் நண்டுகளின் விலையும் 400 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கு விற்பனையாவதாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fish price decrease


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->